உரிமைத் தமிழ்த்தேசம் இதழ் (ஜனவரி-பிப்ரவரி 2018)

அநீதியின் வீழ்ச்சியும் அறத்தின் வெற்றியும் இதுதானா? – தேசத்தின் குரல் ஹாதியாவின் நீதிப் போரும் சனநாயக உரிமையும்! “சாதியம் களையக் கிடைத்த நீதி”, சங்கர் – கௌசல்யா சட்டம் படைக்கும் ! – ஆ. சத்தியபிரபு. உப்புக் காற்றில் உலர்ந்து போன கதறல்கள்! – செல்வி சீனாவின் மஞ்சள் நதியும் கூடங்குளம் அணு மின் நிலையமும் – சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் வெண்மணி : வெறும் கூலிப் போராட்டம் அல்ல! – தோழர் தியாகு செவ்வி நாடுகடந்த […]

அநீதியின் வீழ்ச்சியும் அறத்தின் வெற்றியும் இதுதானா? – தேசத்தின் குரல்

இரண்டாம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் தில்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இந்தத் தீர்ப்பைக் காரணம் காட்டி 2004 முதல் 2014 வரை நடைபெற்ற காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று காங்கிரசார் வாதிட முற்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டதே காங்கிரசாட்சியில்தான் என்பதை நினைவுபடுத்தினால், அப்போதைய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் மீது பழி போட்டுத் தப்ப முயல்கின்றனர. கடந்த 2012ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையமைச்சராகவும் ஆ.ராசா […]

ஹாதியாவின் நீதிப் போரும் சனநாயக உரிமையும்!

மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதில் ஒன்றாக நடவாத ஒன்றை நடப்பது போல் காட்டி அதைத் தடுக்கிறேன் என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வர முனைகிறது. அது நம் அடிப்படை உரிமைகளையே மறுப்பதாக இருப்பது குறித்துச் சட்டத்தின் ஆட்சியாளர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை. அரசியலமைப்புச் சட்டம் பகுதி III ல் சுதந்திற்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, மத சுதந்திரத்திற்கான உரிமை இவை நம் அடிப்படை உரிமைகளாகும். இந்த உரிமைகளையே மறுக்கும் […]

“சாதியம் களையக் கிடைத்த நீதி”, சங்கர் – கௌசல்யா சட்டம் படைக்கும் ! – ஆ. சத்தியபிரபு.

சமூகமெங்கும் பரவிக்கிடக்கும் சாதிய வெறியால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அதிலும் குறிப்பாக சாதிய கௌரவக் கொலைகள் சாதியம் தோற்றுவித்திருக்கிற தனிக் குற்றவகை. வெளித் தெரிந்தவை ஒருசிலவே. மூடிமறைக்கப்பட்டவைகளுக்கு எவ்விதக் கணக்கும் இல்லை. அவற்றில் ஒன்றுதான் உடுமலை சங்கர் படுகொலை. 13.03.2016 படுகொலை நிகழ்ந்த அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 21 மாதங்களாக திருப்பூர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இறுதியில் சென்ற 12.12.2017 அன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 […]

உப்புக் காற்றில் உலர்ந்து போன கதறல்கள்! – செல்வி

ஒக்கி பெரும்புயல் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட மீனவர்களின் உயிரையும் உடைமையையும் குமரி மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தையும் அடித்துப் போட்டுங்கூட, இந்திய, தமிழக அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. சமவெளி மக்களுக்கு மீனவர் துயரங்கள் புரிவதில்லை. எனவே சில கேள்விகள் கேட்டு அவர்களுக்குப் புரிய வைக்க முயல்வோம். ஒக்கி புயல் குறித்த முன்னறிவிப்பு வழங்கப்பட்டதா? இல்லையா? இல்லை. இந்திய வானியல் ஆய்வகம் முறையான முன்னெச்சரிக்கை வழங்கவில்லை. நவம்பர் 29 அன்று சுமார் 70 கிமீ வேகத்தில் புயல் […]

சீனாவின் மஞ்சள் நதியும் கூடங்குளம் அணு மின் நிலையமும் – சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

மஞ்சள் நதி, ஆசியாவின் மூன்றாவது பெரிய நீளமான நதி. மேற்கு சீனாவில் குய்ங்க்கை மாகாணத்தில் உள்ள பயன் ஹர் மலைகளில் தோன்றி சுமார் 5,400 கி.மீ. பயணித்து ஷாண்டோங் மாகாணத்தில் பஹாய் கடலில் தன்னுடைய பயணத்தை இந்த நதி முடித்துக் கொள்கிறது. பண்டைய சீன நாகரீகத்தின் தோற்றுவாயாக மஞ்சள் நதி இருந்துள்ளது. செழிப்பிற்கும், வளத்திற்கும் பெயர் பெற்ற மஞ்சள் நதி இன்று சீனாவின் சோகம் (china’s sorrow) என்றும் அழைக்கப்படுகிறது. அடிக்கடி வெள்ளப்பெருக்காலும், நதிப் படுகை உயர்ந்ததால் […]

வெண்மணி : வெறும் கூலிப் போராட்டம் அல்ல! – தோழர் தியாகு செவ்வி

வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாக, கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் தியாகு. அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘வெண்மணியின் குழந்தை’. விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். சிறைபட்டிருந்த ஆண்டுகளில் ‘மூலதனம்’ நூலை மொழிபெயர்த்தவர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராகவும் ‘உரிமைத் தமிழ்த் தேசம்’ ஆசிரியராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் தியாகு, வெண்மணி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். கீழத் தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் எப்போது தொடங்கியது? […]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில்… அடுத்து என்ன? (சென்ற இதழின் தொடர்ச்சி)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில்… அடுத்து என்ன? உருத்திரகுமாரன் விரிவான பேட்டி கேள்வி: தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு அல்லது தீர்வுகள் வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தச் செயல்வழி ஒன்று தொடர்கிறது; இது தொடர்பாக உள்ளூர்த் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குறிப்பான சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள்; மிக அண்மையில் உலகத் தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் தமிழர் குழுக்கள் மீளிணக்கம் நோக்கிய நேர்வகை முயற்சிகள் எடுத்து வருகின்றன – இவை உள்ளிட்ட இப்போதைய அரசியல் சூழலைக் […]