பிரிவு வாரியான பதிவுகள்: நிகழ்வுகள்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் – மொழிப் போர் ஈகியர்க்கு வீரவணக்கம்

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் சார்பில் சனவரி 25 அன்று ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டியக்கத்தில் அங்கம் பெற்றுள்ள நமதியக்கம் சார்பில் தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு தலைமையில் இளந்தோழர்கள் மலர்விழி, அதியமான் தோழர்கள் சுதாகாந்தி, நான்சி வெங்கடேஷ், குமரேசன், சுந்தரமூர்த்தி, ஜீவானந்தம், கதிர்,தமிழினியன் உள்ளிட்ட தோழர்கள் கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். காலைமூலகொத்தளத்திலும் நடராசன்- தாளமுத்து நினைவிடத்தில் தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

mozhippor 2015_3 mozhippor 2015_4 mozhippor 2015_5 mozhippor 2015_6 mozhippor 2015_7

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள் கும்பகோணம், தஞ்சாவூர், சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெற்றன. கும்பகோணத்தில் சனவரி 25 காலை 11 மணியளவில் மோதிலால் தெருவில் முகமது செல்லப்பா இல்ல மாடியில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. தோழமை இயக்கத் தோழர்கள் உரையாற்றிய பின் பொதுச்செயலாளர் தோழர் வே.பாரதி சிறப்புரையாற்றினார். நிகழ்வை தோழர் அய்யா.சுப்பிரமணியம் ஒருங்கிணைத்தார். தஞ்சை செங்கிப்பட்டி கீழத் தெருவில் மாலை 6 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தோழர் மாணிக்கம் தலைமை வகித்தார். தோழர்கள் அய்யா.சுப்பிரமணியம், பாரி ஆகியோர் உரையாற்றிய பின் தோழர் வே.பாரதி சிறப்புரையாற்றினார். சனவரி 26 அன்று சிவகாசியில் மாலை வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. தோழர் வே.பாரதி சிறப்புரையாற்றினார். தோழர் தெய்வக்கனி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மொழிப் போர் ஈகியர்க்கு வீரவணக்கம்!

mozhippor 2015_0mozhippor 2015_1

மீதேன் திட்டத்தை எதிர்த்து கும்பகோணத்தில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் பங்கேற்பு

தமிழ்நாடு மாணவர் இயக்கம்-தமிழ்நாடு இளைஞர் இயக்கம் மீதேன் திட்டத்தை எதிர்த்து சென்ற 1.1.2015 அன்று கும்பகோணத்தில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். 5.1.2015 அன்று ஐந்தாம் நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பேரா ஜவாகிருல்லா போராட்டத்தை பழச்சாறு தந்து நிறைவு செய்தார். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் வே.பாரதி கலந்துகொண்டு உரையாற்றினார்.

10361510_628369200606708_5182053225170580796_n

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு முடிவுகள்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு சென்ற 28.12.2014 ஞாயிறு அன்று சென்னையில் கூடி எடுத்த ஒருமனதான முடிவுகள்:

      1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
      2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
     3) தோழர் தியாகு, தோழர் வே.பாரதி, தோழர் பாரி ஆகியோரைக் கொண்ட புதிய தலைமைக் குழு நியமிக்கப்பட்டது.
     4) தமிழ்த் தேசம் இதழின் ஆசிரியராகத் தோழர் தியாகு தொடர்வார்.  தோழர் ஆதவன், தோழர் குருநாதன் ஆகியோர்  இதழின் ஆசிரியர் குழுவிற்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆசிரியர் குழு  இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, இதழ் குறித்து திறனாய்வு செய்து கொள்ள வேண்டும்.
     5) இப்போதுள்ள உறுப்பினர்களைக் கிளைகளாகப் பிரித்து அமைத்துத் தொடர்ந்து இயங்கச் செய்வது தலைமைக் குழுவின் பொறுப்பாகும்.
     6) இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மாதப் பங்களிப்புச் செலுத்துவது, தமிழ்த் தேசம் இதழைப் பரப்புவது, இயக்கத்திற்கு நன்கொடையாளர்களையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது ஆகியவை  இன்றியமையாக்  கடமைகளாகும். இக்கடமைகளைச் செய்து அதைக் கிளைகளின் மூலம் தலைமைக்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும்.
  7) மீத்தேன் எதிர்ப்பு இயக்கம், அணுஉலை எதிர்ப்பு இயக்கம், தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம், இந்தி-சமஸ்கிருத-ஆங்கிலத் திணிப்பு எதிர்ப்பு இயக்கம், மோதி அரசின் பார்ப்பனீயப் பண்பாட்டு எதிர்ப்பு இயக்கம், காவிரி-முல்லைப் பெரியாறு மீட்பு இயக்கம், தமிழீழ மக்களுக்கான ஈடுசெய் நீதிப் போராட்டம் ஆகியவற்றில் தற்சார்பாகவும் கூட்டாகவும் முனைப்புடன் இயக்கம் செயல்பட வேண்டும்.
IMG-20141228-WA0022
IMG-20141228-WA0017

எழுத்தினூடே விரியும் தோழர் தியாகுவின் சித்திரம் – அழைப்பிதழ்

பிசகு அமைப்பு சார்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகுவின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், உரைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம்(12.10.2014-ஞாயிறு, இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை )  நடைபெற உள்ளது.

thozhar thiyagu books_

          வாழ்நாள் முழுதும் புரட்சிக்காகத் தன்னை மிச்சமின்றி ஒப்படைத்துக் கொண்டவர் தோழர் தியாகு. எண்ணம் சொல் செயலால் தமிழ்த் தேசியச் சமூகநீதிக்காக நம் காலத்தில்   உயிர்ப்போடு ஓய்வின்றி பாடாற்றி வருபவர்.தாயகத் தமிழரின்  ஈழத் தமிழரின் விடுதலைக்குக் கோட்பாட்டளவில் முதன்மையான வழிகாட்டியாகத் திகழ்பவர். நடப்பில் இந்தக் கடைசி நொடியில் நிலவும் அரசியலிலும் தன்னை உடனுக்குடன் பொருத்திக்கொண்டு அறிவியல் கண்ணோட்டம் அணுவளவும் பிசகாமல் புதிய திசைவழியை நமக்குக் கைகாட்டியும்  கைகோர்த்தும் நிற்பவர். தமிழகமே உணர்வுவேகத்தில் ஒரு நிலைப்பாட்டில் நின்றாலும், ஒற்றையரானாலும்  மார்க்சிய அணுகுமுறையில் தான் எடுத்த நிலைப்பாட்டில் மலைபோல் ஊன்றி நின்று உறுதியாக முழங்குபவர். தோழருக்கான  இந்நிகழ்வு இளைஞர்களாகிய நமக்கு மிகச் சிறந்த வகுப்பு! எந்த அமைப்புகளில் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட பண்புகள் நமதாக வேண்டும்.
தமிழ்த் தேசியச் சமூகநீதிப் புரட்சிப் படைக்கு வேண்டிய எதிர்கால ஒற்றுமைக்கு இது வழி சமைக்கும்.
வே.பாரதி,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
09865107107

தமிழ் மக்கள் நீதிப் பேரணியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

செப்டெம்பர் 24, 2014 புதன்கிழமை சென்னை எழும்பூர் ராசரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில் நடைபெற்ற பேரணியில் பொதுச் செயலாளர் தோழர் தியாகுவுடன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தமிழ் மக்கள் நீதிப் பேரணி!

நமது ஐந்து கோரிக்கைகள்:

1) இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா மன்றத்தில் பேச அனுமதிக்காதே.
2) இந்திய அரசே ஐ.நா மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடு.
3) சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்து. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையையும் கச்சத் தீவையும் மீட்டுக் கொடு.
4) இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு. இரட்டை குடியுரிமை வழங்கு.
5) இந்திய அரசே தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முழுமையாகச் செயல்படுத்து.

tamil nation liberation movement 1 tamil nation liberation movement 2 tamil nation liberation movement 3 tamil nation liberation movement 4 tamil nation liberation movement 5 tamil nation liberation movement 6 tamil nation liberation movement 7

தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தமிழக அரசே,அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத் திணிப்பைக் கைவிடு!எனும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 07.08.2013 செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு மன்றோ சிலையிலிருந்து “கோட்டை நோக்கிப் பேரணி”நடைபெற உள்ளது.இதற்கான எமது இயக்கத்தின் பரப்புரையின் இரண்டாம் கட்டமாக  19-07-1013 தொடங்கி 27-07-2013 வரை வட சென்னை பகுதி, கொளத்தூர், நுங்கம்பாக்கம், பாரிமுனை, மதுரவாயில், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களிலும் இறுதியாக திருவெற்றியூரிலும்  நடைபெற்றது.தோழர்கள் பாரி,நாகராசன்,அய்யா சுப்ரமணியம்,எதிர்வன்(வேல்முருகன்),பழனிச்சாமி,பாரதி உள்ளிட்ட தோழர்கள் தொடர்ந்து பருபுரை செய்தனர்.
27-07-2013 மாலை திருவெற்றியூரில் த.தே.வி. இயக்கம், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், திராவிடர் விடுதலை இயக்கம் சார்பில் சாத்துமா நகர்,எம்.ஜி.ஆர் சாலை சந்திப்பிலும்,திருவொற்றியூர் பேருந்து நிலையத்திலும்   தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.இரண்டு கூட்டங்களிலும் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

PHTO0194

PHTO0200

PHTO0179PHTO0200

PHTO0153

PHTO0162