பிரிவு வாரியான பதிவுகள்: காணொளிகள்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய பாசக – காங்கிரசுக் கொடிகள் எரிப்புப் போராட்டம்!

தமிழர் உரிமைக் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துள்ளது பாரதிய சனதாக் கட்சித் தலைமையிலான இந்திய அரசு!
அந்த மறுப்பை எதிர்க்காமலும் கர்நாடகக் காங்கிரசு அரசைத் தட்டிக் கேட்காமலும் இருப்பது இந்தியத் தேசியக் காங்கிரசின் அனைத்திந்தியத் தலைமை!
இந்தியாவை மாறிமாறி ஆண்ட இந்திய வல்லாதிக்கத் தேசியத்தின் அடையாளங்களான பாசக – காங்கிரசுக் கொடிகள் எரிப்புப் போராட்டம் 06.10.2016, வியாழன் மாலை 3 மணி ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்றது.

நரேந்திர மோதி – சித்தராமையா கொடும்பாவி எரிப்புப் போராட்டம்-தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் கர்நாடகாவில் காவிரி உரிமை மறுத்துக் கன்னடர்களால் நடத்தப்படும் தமிழர்க்கு எதிரான வன்முறையைக் கண்டித்துக் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் சென்ற 13.09.2016 செவ்வாய் மாலை 4 மணிக்கு ஈக்காட்டுத்தாங்கல் சாலைச் சந்தியில் நடைபெற்றது.