பிரிவு வாரியான பதிவுகள்: காணொளிகள்

சங்கருக்கு வீரவணக்கம் – கௌசல்யாவுக்குத் தோழமை – சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக-கருத்தரங்கில் தோழர் தியாகு உரை.

சங்கருக்கு வீரவணக்கம் – கௌசல்யாவுக்குத் தோழமை – சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் சென்ற 22.03.2016 அன்று மாலை வடபழனியில் அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. காவல்துறை நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தியது. சங்கருக்கு வணக்கம் செலுத்துவது எமது கடமை – அதைச் செய்தே தீருவோம் என்று நடத்தினோம்.ததேவிஇ தோழர் அய்யா சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வின் தொடக்கமாக தோழர் நாத்திகன், ஆசிரியர் காளிதாசன் ஆகியோர் சாதி ஒழிப்புப் பாடல்கள் பாடினர்.சங்கர், இளவரசன், கோகுல்ராஜ் ஆகியோர் படங்களுக்கு தலைவர்கள் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர். இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்த் தேசம் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை இராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னணி பொழிலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி தமிழ்நேயன், தமிழ்ப் புலிகள் நாகை திருவள்ளுவன், தமிழர் விடுதலைக் கழகம் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் க.அருணபாரதி, இளந்தமிழகம் செந்தில்,குமுக விடுதலைத் தொழிலாளர்கள் மா.சேகர், அம்பேத்கர் சிறுத்தைகள் தெய்வமணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வே.பாரதி ஆகியோர் உரையாற்றினர். தோழர் செ.ஆல்பர்ட் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கல்விக் கூடங்களில் சமூகநீதி மறுப்பும் இந்துத்துவ வெறியாட்டமும் – கண்டனக் கருத்தரங்கம்-தோழர் தியாகு, வே.பாரதி உரை..

கல்விக் கூடங்களில் சமூகநீதி மறுப்பும் இந்துத்துவ வெறியாட்டமும் – கண்டனக் கருத்தரங்கம் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் சென்ற 05.03.2016 சனி மாலை 5 மணியளவில் வடபழனி அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. தோழர் குருநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார். தோழர் தியாகு, பேராசிரியர் சிவக்குமார், அ.அருள்மொழி, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, வே.பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் செ.ஆல்பர்ட் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தோழர் தியாகுவின் உரை இங்கே…

தோழர் வே.பாரதியின் உரை இங்கே…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 : நோட்டா(NOTA) – வுக்குப் பரப்புரை – தெருமுனைக் கூட்டம் 5.

10-05-2016 அன்று மேற்கு மாம்பலம் பகுதியில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் தோழர் வே.பாரதி உரையாற்றிய காணொளிக் காட்சி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 : நோட்டா(NOTA) – வுக்குப் பரப்புரை – தெருமுனைக் கூட்டம் 4.

09-05-2016 அன்று வடபழனி பகுதியில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் தோழர் வே.பாரதி உரையாற்றிய காணொளிக் காட்சி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 : நோட்டா(NOTA) – வுக்குப் பரப்புரை – தெருமுனைக் கூட்டம் 3.

08-05-2016 அன்று கே.கே.நகர் பகுதியில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் தோழர் தியாகு உரையாற்றிய காணொளிக் காட்சி.