20 தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் – தமிழர் நீதிபெற அணிதிரள்வோம்!

வருகிற 16.04.2015 வியாழன் அன்று காலை 10 மணியளவில் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. படுகொலையான தமிழர்க்கு நீதி பெற நான் போராட்டக் களத்தில் அணிதிரள்வோம். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் போராட்டத்தில் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன். நமது கோரிக்கைகள்:

தமிழக அரசே!

1)இருபது தமிழர் படுகொலையில்  ஏழு பேர் தமிழக எல்லைக்குள் இருந்துதான் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசு சார்பில் ஆள் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்க.மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் உடனடியாக முறையிடுக.

2)இது குறித்து இந்திய அரசிடம் சி.பி.ஐ விசாரணை கோருக.

3) தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர்கள், உயரதிகாரிகள் கொண்ட் குழு ஆந்திரச் சிறைகளில் அடைபட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலையையும், அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடுக. இது தொடர்பாக சிறைகளில் வாடும் தமிழர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு ஆந்திர அரசை வலியுறுத்துக.

4)செம்மரம் வெட்டுவதற்கென்று அழைத்துச் செல்லப்பட்டுக்காணாமல் போனவர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுத்திடுக.

5)இருபது தமிழர் படுகொலை தொடர்பாக ஆந்திர அரசைக் கண்டித்தும், இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக.

6) தமிழகத்தில் வாழ வழியற்று கூலிக்கு மரம் வெட்ட மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நிலைக்குத் தள்ளப்படாதவாறு வடதமிழ்நாட்டு பழங்குடியினர் உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வைச் சீர்செய்ய சிறப்புத் திட்டங்கள் வகுத்து உடனடியாக நடைமுறைப்படுத்துக.

ஆந்திர அரசே!

1)சென்ற ஏப்ரல் 7 ஆம் நாள் திருப்பதி வனப்பகுதியில் மோதல்சாவு எனும் பெயரில் இருபது தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திரச் சிறப்புக் காவல் படையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையிலடைத்திடுக. மேற்படி வழக்கின் புலனாய்வை சி.பி.ஐ வசம் ஒப்படைத்திடுக.

2)செம்மரம் வெட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்க.

3)செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுவரும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திடுக.

இந்திய அரசே!

1)இருபது தமிழர் படுகொலை தொடர்பாக ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இக்கொலை குறித்து சி.பி.ஐ புலனாய்வுக்கு உடனே ஆணையிடுக.

2)செம்மரக் கடத்தல் குறித்தும் இது தொடர்பாக நடந்துள்ள மோதல் கொலைகள் குறித்தும் பொறுப்பில் உள்ள உச்சநீதி மன்ற நீதிபதியைக் கொண்டு முழுமையான நீதி விசாரணை நடத்துக.

3)இந்திய அளவில் மோதல் கொலைகள் தொடர்பான தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடுக.

4)உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவைப் பிறப்பித்துள்ள ஆணைகளுக்கு இணங்க மோதல் கொலைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் ஒரு தனிச் சட்டமியற்றுக.

தோழர் வே.பாரதி
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
9865107107

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


7 + 5 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>