சமத்துவ சாயம் !! – உ.திலகவதி, சட்டக் கல்லூரி மாணவர்

பெண்ணுரிமைகளுக்கு மதிப்பளித்து சட்டமும் முற்போக்குச் சமூகமும் பெண்கள் முன்னேறவும் சுயமாய் வாழவும் ஊன்றுகோளாக இருந்து வரும் இதே நேரத்தில் தான் நசுக்கப்படும் பெண்ணுரிமைகள் குறித்தும் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒருவரின் உரிமையில் இன்னொருவர் தலையிடுவதே அநாகரிகம் எனும் போது, இன்னும் பெண்களின் உரிமைகள் ஒரு காற்றுப் புகா பெட்டியில் வைத்து நசுக்கப்பட்டு மூச்சுத் திணறடிக்கப்படுகின்றது. இதனை ஒளித்து மறைக்கும் சமூகம் தான், பெண் சமூகம் விடுதலை அடைந்து விட்டதாக போலியாய் சமத்துவ சாயம் பூசி […]

வேண்டும் ஜோயல் பிரகாசுக்கு நீதி! – மலையன்

தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்வில் உயர்ந்த சிகரங்களைத் தொடுவது மட்டுமல்ல, அப்படிக் கனவு கூடக் காணக் கூடாது என்கிறது பார்ப்பனீயம். சாதியம் தந்துள்ள சமூகப் பொருளியல் தடைகளையெல்லாம் உடைத்து ஒளிரும் அறிவுச் சுடர்களை அது புதைகுழிக்குத் தள்ளுகிறது. ரோகித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா இப்போது ஜோயல் பிரகாசு! தற்கொலை ஏற்கத்தக்கதல்ல என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த உளவியலின் காரணிகளை மறைத்து அரண் செய்ய இடமளித்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்போம். ஜோயல் பிரகாசு – வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை […]

தமிழர் ஒத்துழையாமை இயக்கம்

*விவசாயிகள் போராட்டம் வெல்லத் துணை நிற்போம்!* *காவிரி, நெடுவாசல் – இந்திய அரசின் வஞ்சகம்* *தமிழர் ஒத்துழையாமை இயக்கம்* *இந்திய அரசின் பிரதமரும் அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்குள் நுழையக் கூடாது!* *தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் போராட்ட அறிவிப்பு!* தமிழ்நாட்டின் விவசாயிகள் கோவணம் கட்டிக் கொண்டும் பிணங்களாய்ப் படுத்துக் கொண்டும் தில்லியில் போராடும் காட்சிகளை அன்றாடம் பார்த்து வருகிறோம். தஞ்சையிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகமெங்கும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்து வருவதும் தமிழகக் காவல்துறை அச்சுறுத்தி அடக்குவதும் […]

திருநங்கை தாராவிற்கு நீதி வேண்டி வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய கண்டன ஆர்பாட்டம் சிறப்புற நடைபெற்றது.

திருநங்கை தாராவிற்கு நீதி வேண்டி சென்ற 04.12.2016 ஞாயிறு அன்று வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய கண்டன ஆர்பாட்டம் சிறப்புற நடைபெற்றது. தோழர் தி.சுதாகாந்தி தலைமையேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார். தோழர் தமிழ்க் கதிர் அனைவரையும் வரவேற்றார். பொதுச் செயலாளர் தோழர் வே.பாரதி தொடக்க உரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், உரிமைத் தமிழ்த் தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, சிபிஎம் தென் சென்னை மாவட்டச் […]

திருநங்கைகள் வாழ்வுரிமைக்காக ஒன்றுபடுவோம்..!

அன்பிற்குரியீர்! வணக்கம், திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என வரையறுத்துச் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது உச்ச நீதி மன்றம். சாதி மத ஏற்றதாழ்வுகளை நீக்கச் சட்டம் என்ன சொன்னாலும் சமூக நடைமுறையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்பதை அறிவோம். அதைப் போலவே திருநங்கைகளுக்கான சமூக மதிப்பைச் சட்டம் உறுதி செய்தாலும், அது சமூக உளவியலில் ஊடுருவி நிலை பெறவே இல்லை . தாராவின் மரணம், அது குறித்துச் சமூகத்தில் நிலவும் மெளனம், திருநங்கைகள் மீது தொடரும் காவல் துறை […]

மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. சாலையில் மக்கள் திரண்டு நின்று உரை கேட்டனர். தோழர் ஜீவாவின் கடைக்குள் நிகழ்வை நடத்தினோம். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால் மக்கள் திரண்டு நிற்பதைத் தடுக்க இயலவில்லை காவல் துறையால். நம் இடம் என்பதால் ஒலிபெருக்கி வைப்பதையும் தடுக்க முடியவில்லை. தோழர் தமிழ்க் கதிர் தொடக்கவுரையாற்றினார். தோழர் சு.மோகன் அனைவரையும் வரவேற்றார். உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தி.சிவராஜ், நெல்லை பீட்டர், சுயமரியாதை மாணவர் இயக்கம் மனோஜ், […]

கிண்டி காவல்துறையின் சனநாயகக் கொலை – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த துணிவோடு அணிவகுப்போம்.

அன்பிற்குரியீர்! வணக்கம். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மாவீரர் நாள் நிகழ்வு நடத்தும் ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகர் முதன்மைச் சாலை முழுதும் காக்கிக் கூட்டம் குவிந்துள்ளது. அந்த இடமே காவலர்களால் நிறைக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் மாவீரர்ளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பதாகை தலைவர் பிரபாகரன் படம் கொண்டு வைக்கத் தடை போடுவது சனநாயகக் கொலை! அதுவும் நாம் வைக்க இருப்பது சொந்த இடத்தில்தானே தவிர பொது இடத்தில் அல்ல. நம்மை அச்சமூட்டிப் பணிய வைக்க விரும்புகிறார்கள். மாவீரர்களுக்கு வீரவணக்கம் […]